தேர்தல் மோதல் எதிரொலி மதுரை சரக டிஐஜி, எஸ்.பி அதிரடி மாற்றம்

திருமங்கலம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக திமுகவினர் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக 14 அதிமுகவனரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. ஏராளமான வாகனங்கள் தாக்கப்பட்டன.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் மற்றும் அதிமுகவினரின் கார்கள் தாக்கப்பட்டன. இதுகுறித்து விசாரிக்க வந்த மேலூர் அதிமுக எம்.எல்.ஏ சாமியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் போலீஸார் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.
திமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த அதிமுகவினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல், வன்முறை தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக வேட்பாளரைக் கொல்ல சதி நடப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். மேலும், வன்முறை தொடர்பாக திமுக, அதிமுக சார்பில் சரமாரியாக புகார்களும் கூறப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, திருமங்கலம் இடைத் தேர்தல் க ளத்தில் பல தவறுகள் நடப்பதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். காவல்துறை முறையாக செயல்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில், திருமங்கலம் தேர்தல் வன்முறை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அவர் அறிக்கை அனுப்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று திடீரென டிஐஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. மனோகர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அந்தப் பதவிகளுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்க தலா 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்கும்படியும் அது மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications