கலாச்சாரத்தை அழிக்கிறார் சோனியா- சிங்கால்
சென்னை: இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பயங்கரவாதம் நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிய தைரியமான, உறுதிமிக்க தேசத் தலைவர்கள் தேவை.
பலவீனமான, கோழை அரசியல்வாதிகளால் இதை சாதிக்க முடியாது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் செயல்படும், சிமி முதலான அமைப்புகளின் துணையுடன் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து தீவிரவாதம் என்ற இல்லாத ஒரு புதிய வார்த்தையை சோனியா கண்டுபிடித்துள்ளார். இந்த நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் பணியில் சோனியா ஈடுபட்டுள்ளார்.
பங்களாதேசிலிருந்து ஊடுருவியுள்ள மூன்று கோடி பேருக்கு அடி பணிந்து, அவர்களை நம் குடிமக்களாக அங்கீகாரம் செய்ய முன்வரும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டு விலகுவது நல்லது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுடனான ராஜீய உறவுகளை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும், அந்த நாடுகளில் செயல்படும் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் தர்ம யுத்தம் புரிய, ஒரு அர்ஜுனன் இப்போது தேவையாய் இருக்கிறான். இம் மாதம் 28ம் தேதி, மும்பையில் சாதுக்கள் மாநாடு நடக்கிறது என்றார் சிங்கால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications