பாக். ராணுவ தளபதி-சர்தாரி அவசர ஆலோசனை
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிராதத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் நிர்ப்பந்தம் அதிகரித்து வரும் பின்னணியில், ராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானியுடன், அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் பாகிஸ்தானின் டான் டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பதட்டத்தைத் தணிக்க இந்தியா சில திட்டங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்திருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்க வேண்டும் எனவும் அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து கயானியுடன் சர்தாரி முக்கியமாக ஆலோசித்ததாக தெரிகிறது.
நேற்றுதான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், அந்த அமைப்பின் லக்வியும், ஜரார் ஷாவும், இதை ஒத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான வலுவான ஆதாரத்தை அமெரிக்காவும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.
இதையடுத்து லஷ்கரின் தொடர்பை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சர்தாரி, கயானி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
நேற்றைய சந்திப்பின்போது தீவிரவாதிளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கயானி விளக்கியதாக தெரிகிறது. மேலும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் அவர் விளக்கியதாக தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications