புதுக் கார்களுக்கு மவுசு குறைவு-'யூஸ்ட் கார்'களுக்கு கிராக்கி!
கொல்கத்தா: புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார்களை வாங்க மக்களிடையே அதிக கிராக்கி நிலவுகிறது. இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம்.
பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, புதிய கார்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிகிறது.
அதிலும் சிறிய வகை கார்களுக்குத்தான் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பழைய கார்களை வாங்கி விற்கும் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
மாருதி சுசுகி இந்தியாவின் ட்ரூ வேல்யூ நிறுவனம், தேசிய அளவில், பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் விற்பனையில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. பழைய கார்களுக்கான சந்தையில் இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு வெறும் பத்து சதவீதம்தான்.
சென்ற ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்நிறுவனத்தின் பழைய கார்கள் விற்பனை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற 2007-08-ஆம் நிதி ஆண்டில் 14.10 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
ஆனால் இதற்கு மாறாக, இந் நிறுவனத்தின் புதிய கார்கள் விற்பனை, 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, சென்ற அக்டோபர் மாதத்தில், 8 சதவீதம் குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் புதிய கார்கள் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்தது.
ஏப்ரல் - நவம்பர் மாத காலத்தில், ஒட்டுமொத்த அளவில், பயணிகள் கார்கள் விற்பனை ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து ட்ரூ வேல்யூ நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (விற்பனை) ரவி பாட்டியா கூறுகையில், டிசம்பர் மாதத்தில் பழைய கார்கள் விற்பனை 22 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கும் என கணித்துள்ளோம்.
அக்டோபர்- டிசம்பர் காலத்தில் இந்த வளர்ச்சி 24-25 சதவீதமாக இருக்கக் கூடும். ஆனால் தேவைக்கேற்ற பயன்பாட்டுக் கார்களின் எண்ணிக்கை எங்களிடம் குறைவாக உள்ளது என்றார்.
கையிருப்பை அதிகரிக்கும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் வாகன பராமரி்ப்பு மையங்களில் கார் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மாருதியின் வளர்ச்சியைப் பார்த்து தற்போது ஹூண்டாய் நிறுவனமும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாம்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications