ஜாலிக்காக திருட்டில் ஈடுபட்ட பெண் என்ஜீனியர் கைது
சென்னை: நல்ல வேலையில் இருந்தும் கூட ஜாலிக்காக கிரெடிட் கார்டுகளைத் திருடி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் என்ஜீனியர் கைதாகியுள்ளார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் ஒரு விடுதியில், பேயிங் கெஸ்டாக தங்கியுள்ளார்.
நேற்று காலை, இவரது கைப்பையில் வைத்திருந்த இரண்டு கிரெடிட் கார்டுகளை காணவில்லை. ஒரு கார்டு, ஸ்டான்டர்ட் சார்ட்டர்டு வங்கி கார்டாகும். மற்றொன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியினுடையது.
உடனடியாக, ஸ்டான்டர்ட் சார்ட்டர்டு வங்கிக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கும் தனது கிரெடிட் கார்டுகள் காணாமல் போனது குறித்து தகவல் கொடுத்து, அவற்றை முடக்கி வைக்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்குள் அந்த இரு கார்டுகள் மூலம், தலா ரூ.7,500 வீதம் ரூ. 15,000க்கு, சென்னை அமைந்தகரையில் உள்ள பிரவீன் ஜூவல்லரி என்ற நகைக் கடையில் நகைகள் வாங்கப்பட்டிருந்தன.
உறவினர் ஒருவர் உதவியோடு நகைக்கடையை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் மகாலட்சுமி.
அப்போது, ஒரு பெண் இப்போது எங்கள் கடையில்தான் நகைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று நகைக் கடைக்காரர் பதில் தந்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணை எப்படியாவது பேசி அங்கேயே பிடித்து வைக்குமாறு கூறிய மகாலட்சுமி, கடைக்கு விரைந்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணை கடை நிர்வாகிகள் பேச்சு கொடுத்து அங்கேயே இருக்க வைத்தனர். கடைக்கு வந்த மகாலட்சுமி, அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம், அவர், மகாலட்சுமியுடன் விடுதியில் உடன் தங்கியிருப்பவர் ஆவார்.
திருட்டுத்தனம் வெளிப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண், விளையாட்டாக திருடி விட்டேன், மன்னித்து விடுமாறு கெஞ்ச ஆரம்பித்தார்.
காலையில் கார்டு காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியுடன் நான் தேடியபோது ஒன்றும் தெரியாதவர் போல என்னிடம் துக்கம் விசாரித்த நீ, அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் மன்னித்திருப்பேன். இப்போது மன்னிப்பே கிடையாது என்று கூறி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பிடிபட்ட பெண்ணின் பெயர் மணிமாலா (28). தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எலக்ட்ரானிக் என்ஜினீயரான இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தன்னுடன் தங்கியிருக்கும் சக தோழிகளிடம் கிரெடட் கார்டுகள் அதிகம் புழங்குவதைப் பார்த்து அவற்றை திருடும் ஆசை வந்துள்ளது. கார்டுகளைத் திருடி நகை, பிற பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளார். சூளைமேடு, பாண்டி பஜார், திருமங்கலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி கிரெடிட் கார்டுகளை திருடியுள்ளார்.
போலீஸார் விசாரணையின்போது கதறி அழுத மணிமாலா, விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் திருட்டுகளை செய்துவிட்டதாகவும் மன்னித்துவிடுமாறும் கதறினாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications