சிஆர்ஆர், ரெபோ ரேட் மேலும் குறைப்பு
மும்பை: சிஆர்ஆர் எனப்படும் ரொக்க இருப்பு விகிதம், வங்கி வட்டி விகிதம் மற்றும் ரெபோ ரேட் விகிதங்களை மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளது.
சிஆர்ஆர் 50 புள்ளிகள் அடிப்படையிலும் (100 புள்ளி = 1 சதவிகிதம்), வங்கி வட்டி மற்றும் ரெபோ ரேட் விகிதம் 100 புள்ளிகள் அடிப்படையிலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரை பணப் புழக்கம் தாராளமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்புக்குப் பின் நிலவும் புதிய விகிதங்கள்:
சிஆர்ஆர் 5 சதவிகிதம், வங்கி வட்டி 5.5 சதவிரகிதம், ரெபோ ரேட் 4 சதவிகிதம்.
சர்வதேச பொருளாதார தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள இந்த சலுகைகள், தொழில் துறை நடவடிக்கைகள் மற்றும் வங்கித் துறை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இயல்பு நிலையில் வைத்திருக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.
ஆனால் வங்கிகள் சிறு கடன்களை அதிகம் வழங்குவதில் ஆர்வம் காட்டாத வரையில் இந்த சலுகைகளால் பெரிய பலன் ஒன்றும் இருக்காது என தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications