தீவிரவாதத்திற்கு எதிராக எந்த எல்லை வரையும் செல்வோம் - பிரதமர்
டெல்லி: தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயார் என பிரதமர் மன்மோகன் சிங் திடீரென கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் பேசுகையில், தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயாராக உள்ளது. ஆயுதங்களை எடுப்பதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை வேரறுப்பதில் அக்கறை காட்ட வேண்டும். அதற்குரிய பாதையில் அது செல்லும் என நம்புகிறோம்.
அதேபோல, புதிய வங்கதேச அரசு, வங்கதேச மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு யாரும் பயன்படுத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம்.
மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை, குற்றவாளிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
தீவிரவாதமும், நக்சலிசமும் பெருகி வருவது கவலை அளிக்கிறது. தீவிரவாதத்துடன் அரசு எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாது.
மும்பை, டெல்லி,அஸ்ஸாம் குண்டுவெடிப்புகள் நமக்குப் பின்னடைவுதான். ஆனால் தீவிரவாதத்தை நாட்டை விட்டு வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.
தீவிரவாத அமைப்புகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். ஆயுதங்களுடன் இருப்போரிடம் அரசு பேச முடியாது.ஆயுதங்களால் எதற்கும் தீர்வு காண முடியாது.
ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, இந்திய குடிமக்களாக அவர்கள் வருவார்களேயானால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது என்றார் சிங்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications