ஹின்ட்ராப் தலைவர்கள் விடுதலை இல்லை - மலேசிய அரசு
டெல்லி: மலேசிய சிறையில் வாடி வரும் ஹின்ட்ராப் அமைப்பின் தலைவர்களை இப்போதைக்கு விடுவிக்கும் எண்ணம் இல்லை என்று மலேசிய அரசு கூறியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழுவின் சார்பில் மிகப் பிரமாண்டமான போராட்டம் நடந்தது.
இந்தியர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தை மலேசிய போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஒடுக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹின்ட்ராப் அமைப்பின் நிர்வாகிகள் உதயக்குமார் உள்ளிட்ட நால்வர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழர் அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் மலேசிய அரசு அவர்களது விடுதலை குறித்து இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது.
இந்த நிலையில் டெல்லி வந்த மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறுகையில், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் தங்களது விடுதலை கோரி மறு ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.
அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி அவற்றை பரிசீலித்து முடிவெடுக்கும். இந்தக் குழுதான் ஹின்ட்ராப் தலைவர்களின் விடுதலை குறித்தும் முடிவெடுக்கும்.
ஆனால் சமீபத்தில் கூடிய இக்குழு, ஹின்ட்ராப் தலைவர்களின் விடுதலை கோரிக்கையை நிராகரித்து விட்டது. இக்குழுவின் அடுத்த கூட்டம் நடக்க இன்னும் 2 மாதங்கள் உள்ளது. அப்போது ஹின்ட்ராப் நிர்வாகிகளின் விடுதலை குறித்து மறு ஆய்வுக் குழு சாதகமாக முடிவெடுத்தால் அவர்களை விடுவிக்க அரசு தயாராகவே உள்ளது என்றார் சுப்ரமணியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications