600 அதிமுக, தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்
மதுரை: அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி சுமார் 600 பேர் நேற்று மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தை சேர்ந்தவர்களை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக் கட்சியில் இணைய வைத்தனர் அக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் அதிமுகவில் இருந்த பலரை திமுகவில் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவைத்துள்ளனர் திமுகவினர்.
திருமங்கலம் தொகுதி விடத்துகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 600 பேர் அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளிலிருந்து விலகி திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமங்கலம் தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க. அழகிரி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுகவைச் சேர்ந்த மிசா பாண்டியன் ஏற்பாட்டின்படி அதிமுக நிர்வாகி மாலதி தலைமையில் 250 பேரும், கோணம்மாள் தலைமையில் தேமுதிகவைச் சேர்ந்த 200 பேரும் திமுகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications