திருமங்கலத்தில் நாளை கருணாநிதி பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருமங்கலம் தொகுதியில் நாளை முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்து பேசுகிறார்.
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார்.
திமுக சார்பில் முன்னணி நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரும் தத்தமது வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதல்வர் கருணாநிதி நாளை பிரசாரம் செய்கிறார்.
நாளை மாலை 6 மணிக்கு தேவர் சிலை அருகே நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகிறார்.












Click it and Unblock the Notifications