ஓபாமாவுக்கு வீடு காலியில்லை-ஹோட்டலில் தங்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா, தனது குடும்பத்தினருடன் வாஷிங்டன் வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அதிபர் பதவியை ஏற்கவுள்ளவர்கள் தங்கும் பிளேர் இல்லம் காலியாக இல்லாததால், அவர் தற்காலிகமாக ஹோட்டலில் தங்குகிறார்.
ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பாரக் ஓபாமா பதவியேற்கவுள்ளார். இதையொட்டி சொந்த ஊரான சிகாகோவிலிருந்து தனது மனைவி மிட்சல் ஓபாமா, மகள்கள் மலியா (10), சாஷா ஓபாமா (7) ஆகியோருடன் வாஷிங்டன் வந்து சேர்ந்துள்ளார்.
இன்று முதல் மலியாவும், சாஷாவும், வாஷிங்டனிலுள்ள புதிய பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஓபாமாவும், குடும்பத்தினரும் ஹே ஆடம்ஸ் ஹோட்டலில் தங்குகின்றனர். வழக்கமாக அதிபர் பதவியேற்கவுள்ளவர்கள், தற்காலிகமாக பிளேர் இல்லம் என்ற இருப்பிடத்தில்தான் தங்குவார்கள்.
ஆனால் தற்போது பிளேர் இல்லம் காலியாக இல்லை. எனவே ஓபாமா குடும்பத்தினரால் அங்கு தங்க முடியவில்லை. இன்னும் சிலநாட்கள் கழித்துதான் அந்த இல்லம் கிடைக்கும். எனவே அதுவரை ஓபாமா குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கவுள்ளனர்.
முன்னதாக சிகாகோவிலிருந்து ஓபாமா குடும்பத்தினருடன் கிளம்பியபோது அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்த வீட்டை விட்டு கிளம்பியது என்னை பலவித உணர்வுகளில் மூழ்கடித்தது.
நாங்கள் இல்லாமல் வீடு காலியாக இருப்பதை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் இதைத் தவிர்க்க முடியாதே என்றார்.
இன்று செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் மூத்த ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் ஓபாமா ஆலோசனை நடத்தவுள்ளார்.
பின்னர் செனட் சபை சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் ஆகியோரையும் ஓபாமா சந்தித்துப் பேசவுள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications