பாதையில்லை-ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வெறிச்!
கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மாலை அணிந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தமிழகத்திலிருந்து தேனி, கம்பம், வாலையாறு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, பாலக்காடு, மைசூர் வழியாகவும் வாகனங்களில் வருவது வழக்கம்.
தற்போது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தினமும் பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்களில் பாதிப் பேர் தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை-புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு வந்து ஆரியங்காவில் அய்யர் வேடம் பூண்டு இருக்கும் ஐயப்ப சாமியை வணங்கி விட்டு செல்வது வழக்கம்.
அதே சமயம் பல்வேறு பாதை வழியாக சபரிமலை சென்று ஊர் திரும்பும் பக்தர்கள் இந்த பாதை வழியாக திரும்பும்போது இத்தலத்திற்கு வந்து விட்டு செல்வது வழக்கம்.
ஐயப்ப பக்தர்களின் வருகையால் தினமும் புனலூர் முதல் ஆரியங்காவு வரையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள், பலசரக்கு கடைகள் நடத்தி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கேரள எல்லையான கோட்டைவாசல் முதல் புனலூர் வரை 49 கிமீக்கு ரூ.26 கோடி செலவில் புதிய சாலை போடும் பணி தொடங்கியதால் சாலை முழுமையாக அடைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களும் ஆரியங்காவிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அச்சன்கோவில் வழியாக வாகனங்களில் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகையில்லாததால் கோவில் வாளகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் ஆரியங்காவு முதல் புனலூர் வரையிலுள்ள வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் வியாபார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?













Click it and Unblock the Notifications