நீதிபதியைக் கடித்த நாய் சாவு
சண்டிகர்: நீதிபதியைக் கடித்த பின் நாய் இறந்தது.
சண்டிகர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் கார்க். இவர் 24வது செக்டாரில் உள்ள சனாதம் தரம் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பால் மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பக்தர்களுக்கு கார்க் பால் உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் படு வேகமாக அவரை நோக்கி ஓடி வந்து காலில் கடித்து விட்டது.
இதையடுத்து கார்க்கின் குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நீதிபதியை நாய் கடித்த தகவல் அறிந்ததும், போலீஸார் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் 24வது செக்டாருக்கு விரைந்து சென்ற கார்க்கை கடித்த நாயைப் பிடித்தனர்.
அப்போது நாய் இறந்து போனது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி கார்க்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசியும், இம்யூனோகுளோபுலின் ஊசியும் போடப்பட்டது. தற்போது கார்க் ஸ்திரமாக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாய் ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாயாக இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications