மாஜி மந்திரியின் 'டண்டனக்கா டணக்கனக்கா'

Subscribe to Oneindia Tamil

Nainar with Jayalalitha
திருமங்கலம்: முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஒயிலாட்ட குழுவினருடன் சேர்ந்து 'டண்டனக்கா டணக்கனக்கா' ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார்.

திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரை ஹோட்டலில் இருந்து வெயில் ஓய்ந்த பின் மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டார்.

அவருக்கு கே.புளியங்குளத்தில் ஒயிலாட்ட குழுவினர் ஆட்டம் போட்டு வரவேற்பு அளித்தனர். இந்தக் கூட்டத்தில் சேர்ந்து ஆடினார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். ஒயிலாட்ட குழுவினரை விட இவரது ஸ்டெப்ஸ் 'பக்காவாக' இருந்தது.

இந்த இடத்தி் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் தலைமையில் 60 தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து ஜெயலலிதாவை வரவேற்றனர்.

இங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரடிக்கல் பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய வந்தபோது ஒரு வீட்டு மாடியில் திமுகவினர் கும்பலாக நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து போலீசாரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்யப் போக திமுகவினரை கீழே இறக்கிவிட்டனர் போலீசார். எங்க மாடில நாங்க நிக்கிறோம் என திமுகவினர் பதிலுக்கு கூச்சலிட, அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி கீழே இறக்கி வந்தனர் போலீசார்.

அங்கும் பேசிவிட்டு புங்கம்குளம் சென்ற ஜெயலலிதா அடுத்து வாகைக்குளம் நோக்கி வந்தார். வழியில் உள்ள அழகுசிறை என்ற இடத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

இதனால் ஜெயலலிதா அந்த வழியை தவிர்த்து விட்டு வாகைக்குளம் சென்றார். இதனால் அழகுசிறையில் பிரசாரத்தை முடித்துவிட்டு விஜயகாந்த் வாகைக்குளத்துக்கு செல்வது தடைபட்டது.

ஜெயலலிதா அங்கிருந்து செல்லும் வரை நாம் போக வேண்டாம் என விஜய்காந்த் ஒதுங்கிக் கொண்டார். அவரது வாகனங்களை போலீசார் சிந்துப்பட்டி ரோட்டில் திருப்பி விட்டனர்.

ஜெயலலிதா வாகைக்குளம் பிரசாரத்தை முடித்து காண்டை வழியாக பள்ளிக்குண்டு பகுதிக்குச் சென்ற பின்னரே விஜயகாந்த் வாகைக்குளம் வந்தார்.

இதன்மூலம் ஜெயலலிதா- விஜயகாந்த் நேருக்கு நேர் சந்திப்பு தவிர்க்கப்பட்டது.

சாத்தங்குடியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வந்தபோது பெரும் பரபரப்பு நிலவியது. இங்கு திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களும் அருகருகே இருந்தன.

இந்த 3 கட்சிகளின் தொண்டர்களும் குழுமியிருந்ததால் ஜெயலலிதா அங்கு பிரசாரம் செய்ய வந்தபோது போலீஸார் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

கண்டுகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை வழங்க அதை அதிமுகவினர் வாங்கி அணிவித்தனர்.

திமுகவினரை டென்சன்படுத்தும் போஸ்டர்:

இந் நிலையில் திமுக வேட்பாளர் லதா அதியமானின் கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவினர் இணைந்த படத்தை போஸ்டராக அடித்து தொகுதி முழுக்க அதிமுகவினர் ஒட்டி வருவதாஸ் திமுகவினர் கடும் டென்சனாகி போஸ்டரை கிழித்து எறிந்து வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஆங்காங்கே மோதல் மூண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+