சத்யம் நிறுவனத்துக்கு நாஸ்காம் தடை?
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தைத் தடை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது நாஸ்காம்.
இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்களின் தலைமை அமைப்பாகத் திகழ்கிறது நாஸ்காம்.
சத்யம் நிறுவனம் நீண்ட காலமாகவே நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததை அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ராமலிங்க ராஜுவே ஒப்புக் கொண்டதால், இனியும் நாஸ்காமில் சத்யம் நிறுனத்தை நீடிக்க விடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் கணேஷ் நடராஜன் கூறுகையில், சத்யம் நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக தனது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்திருப்பதை நினைத்தால் ஷாக் ஆக உள்ளது. சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடிகள் மற்றும் நம்பிக்கை துரோகத்தை வைத்துப் பார்க்கும்போது, நாஸ்காமிலிருந்து அந்த நிறுவனத்தை நீக்குவதே சரி எனத் தோன்றுகிறது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நேர்மை குறித்து அரசு இனி கண்காணிப்பது அவசியமாகிவிட்டது.
இந்த மோசடிகள் மற்றும் பின்னடைவுகளால் சத்யம் நிறுவனத்தின் 50 ஆயிரம் ஊழியர்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளுக்குத்தான் இப்போது முன்னுரிமை தர வேண்டும்.
சத்யம் நிறுவனத்தின் மோசடி்களால் உலக அளவில் இந்தி ஐடி நிறுவனங்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. இனி என்ன சொன்னாலும் சர்வதேச நிறுவனங்கள் நம்புவார்களா என்பது சந்தேகமே. நிறைய கம்பெனிகளின் வருவாய் வாய்ப்புகளுக்கு ஆபத்து வந்துள்ளது.
முதலீட்டாளர்களும் முழுமையாகப் பின்வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பிரச்சினைகள் போதாதென்று, சர்வதேச நிறுவனங்களை சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பும் நாஸ்காமுக்கு வந்துள்ளது, என்றார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ராமலிங்க ராஜு, நாஸ்காம் அமைப்பின் தலைவராக 200-2007-ம் ஆண்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications