கிளிநொச்சியில் விமானப்படை தாக்குதல் - 2 பள்ளிகள் நாசம்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிளிநொச்சி அருகே உள்ள முரசு மோட்டை என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பள்ளிக்கூடங்கள் இடிந்து நாசமாயின.
தற்போது முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. ஆனால் புலிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்த் தாக்குதல் நடத்தப்படுவதால், ராணுவத்தால் எளிதாக முன்னேற முடியவில்லை.
கிளிநொச்சியில் தற்போது மக்கள் யாரும் இல்லை. இந்த நிலையில், கிளிநொச்சியில் உள்ள முரசு மோட்டை பகுதியில் சிங்கள ராணுவத்தினர் அங்குள்ள முருகானந்தா மகா வித்யாலயா பள்ளி மீது குண்டு வீசினர். அங்குள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளி மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த 2 பள்ளிக் கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்து போயின.
விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடும் தாக்குதல் வெளிப்பட்டால், ஆத்திரத்தில் அப்பாவி மக்களைக் குறி வைத்து விமானத் தாக்குதலை நடத்துவது இலங்கையின் வழக்கம் என்பதால் இம்முறையும் அதுபோலவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
15,000 புலிகளை கொன்று விட்டோம்-பொன்சேகா:
இதற்கிடையே 2 ஆண்டுகளில் இதுவரை 15 ஆயிரம் விடுதலைப் புலிகள் வீரர்களை கொன்றிருப்பதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் கடந்த 2 ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்.
ராணுவ தரப்பில் 2000 பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர். எந்த நாடும் இது போன்ற ஒரு போரை சந்தித்து இருக்க முடியாது. போர் என்றால் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றார் பொன்சேகா.
பாளைக்கு வெளியே ராணுவம்:
இதற்கிடையே ஆனை இறவைப் பிடிக்கும் முயற்சியாக அதற்கு அருகில் உள்ள பாளை என்ற பகுதிக்கு அருகே இலங்கை ராணுவத்தின் 53 மற்றும் 55வது படைப் பிரிவுகள் நிலை கொண்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
டேங்குகள் மற்றும் ஆர்ட்டிலரி துணையுடன் படைப் பிரிவினர் முன்னேறி வருகின்றனர். பாளையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications