ராஜுவுக்கு ஆதரவாக இணையதளம் தொடக்கம்-உடனடியாக மூடல்
ஹைதராபாத்: மெகா மோசடியில் ஈடுபட்டு இந்தியாவின் பெயரை உலக அரங்கில் களங்கப்படுத்தி விட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் இணையதளம் ஒன்றைத் தொடங்கினர். ஆனால் தற்போது அந்த இணையதளம் செயல்படவில்லை.
ராஜுவின் நல்ல விஷயங்களை விளக்கும் வகையில் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.
அதில், மைடாஸ் தவறான ஒரு ஒப்பந்தம். இருப்பினும் ராஜு, உங்களை நாங்கள் இன்னும் நம்புகிறோம், ஆதரவு தெரிவிக்கிறோம். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உயிர்ப்புடன் இருக்க தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுங்கள்.
நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறோம் ராஜு. உங்களிடம் நல்ல பார்வை, லட்சியம் குறிக்கோள் உள்ளது. அதேசமயம், நீங்கள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் இறங்கியது சரியான நடவடிக்கையல்ல.
ஒரு சாப்ட்வேர் நிறுவன அதிபராக இருந்து கொண்டு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், நீங்கள் முற்றிலும் அரசியல்வாதிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
நீங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து விலகி வாருங்கள். அப்படி வெளி வந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மீது முழுக் கவனத்தையும் செலுத்தினால் நிச்சயம் பல புதிய தொழில் உத்திகளை அறிமுகம் செய்வீர்கள். சத்யத்தை தலை நிமிர வைப்பீர்கள் என்று கூறப்பட்டிருந்தது.
சத்யம் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த இணையதளத்தை ஆரம்பித்தார். ஆனால் தற்போது இந்த இணையதளம் செயல்படவில்லை.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications