கைதாகிறார் ராமலிங்க ராஜு?

53,000 தொழிலாளர்களுடன் 66 நாடுகளில் கிளைபரப்பி நிற்கும் நாட்டின் சத்யம் நிறுவனத்தில் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, நிர்வாக இயக்குநரும் அவர் தம்பியுமான ராம ராஜூ ஆகியோர் நடத்தியுள்ள நிதி மோசடிகள், இவர்களை உலகின் மிக கருணையற்ற மனிதர்கள் பட்டியலில் மீடியா சேர்க்கும் அளவுக்குச் செய்துவிட்டன.
இப்போது ராமலிங்க ராஜூவின் மோசடிகள் இத்தோடு நின்றுவிட்டனவா... இன்னும் எவ்வளவு தூரத்துக்குச் சென்றுள்ளன என்று விசாரிக்கும் பணியில் பல குற்றப் புலவனாய்வு ஏஜென்ஸிகளும் களத்தில் இறங்கியுள்ளன. அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமும் இதில் கைகோர்த்துக் கொண்டுள்ளது.
ராஜூ செய்துள்ள மோசடிகள் நிச்சயம் வரலாறு காணாத ஒன்றுதான். எனவே அவருக்கு குறைந்தது 10 ஆண்டு தண்டனை நிச்சயம் என்கிறது செபி.
இந் நிலையில் ராஜூ அமெரிக்காவுக்குத் தப்பி விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரது வக்கீல், 'ராமலிங்க ராஜு எங்கும் ஓடவில்லை. இந்தியாவில், ஹைதராபாத்தில்தான் இருக்கிறார்' என நேற்று மாலை அறிவித்தார்.
உடனே ராஜுவைக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
குறிப்பாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு இதுகுறித்து பல மட்டத்திலிருந்தும் நெருக்கடி முற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இன்று ராஜு கைது செய்யப்படக் கூடும் என ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications