கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை
மும்பை: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி. டிலைட் கப்பல் மற்றும் அதில் இருந்த ஏழு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்தியர்களும் நலமுடன் இருப்பதாக இந்திய கப்பல் துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு டிலைட் கப்பலை கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர். அதில் இருந்த 25 ஊழியர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் இந்தியர்கள் ஆவர்.
ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட டிலைட் கப்பல், கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி ஏடன் வளைகுடா பகுதியில் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் இந்தியர்கள் தவிர, பாகிஸ்தானியர் இருவர், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஏழு பேர், ஈரானியர்கள் ஏழு பேர் மற்றும் 2 கானா நாட்டவரும் இருந்தனர்.
38 ஆயிரம் டன் கோதுமையுடன் ஈரான் துறைமுகமான பந்தர் அப்பாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது டிலைட் கடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் கடற் கொள்ளையர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் 130க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். உலகின் மிகவும் அபாயகரமான கடற் பகுதியாக தற்போது ஏடன் வளைகுடா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications