சத்யத்திற்கு பெயில் அவுட்? அத்வானி கடும் எதிர்ப்பு

சத்யம் நிறுவனத்திற்கு புதிய போர்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கென 3 இயக்குநர்களையும் இன்று கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தக் குழுதான் தலைவரைத் தீர்மானிக்கும். சத்யம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளுக்காக கணிசமான தொகையை பெயில் அவுட் (உதவி நிதி) தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக குப்தா தெரிவித்தார்.
மேலும், சத்யம் நிறுவனத்தின் நம்பகத் தன்மை, வாடிக்கையாளரிடம் மதிப்பு மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதே இப்போதுள்ள சவால்கள் என்றும் குப்தா கூறினார்.
ஊதாரிகளுக்கு பெயில் அவுட்டா .. அத்வானி விளாசல்!
இந்நிலையில் சத்யம் நிறுவனத்துக்கு அரசு ஏன் பெயில் அவுட் தரவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அத்வானி, மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரியாகச் செலுத்திய பணத்தை, யாரோ சிலர் ஊதாரித்தனமாக செய்த செலவை ஈடுகட்டத் தருவது நேர்மையான அரசு செய்யும் காரியமில்லை.
அமெரிக்காவில் உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக் கூடாது.
இந்தியாவின் நம்பகத் தன்மையை அளக்க ஏதோ ஒரு தனிப்பட்ட நிறுவனம் அளவுகோலாகிவிடாது. சர்வதேச நிறுவனங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.
சத்யம் நிறுவனத்தின் சொந்த வளங்களை வைத்துதான் அதன் சிக்கல்களைத் தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி மக்கள் பணத்தில் பெய்ல் அவுட் தரக்கூடாது என்றார். இதே கருத்தை கம்யூனிஸ்டுகளும் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications