பால் விநியோகம் பாதிக்காது - ஆவின் உறுதி
Subscribe to Oneindia Tamil

சரக்கு லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பால், குடிநீர் லாரிகளும் இன்று முதல் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பால், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
ஆனால் பால் லாரிகள் ஸ்டிரைக் செய்தாலும் பால் விநியோகம் பாதிக்காது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பால் லாரிகள் ஸ்டிரைக் செய்தால் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
குறித்த நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் கிடைப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும். எனவே யாரும் பயப்படத் தேவையில்லை என்று ஆவின் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications