விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி - தோல்வியுற்ற முத்துராமலிங்கம்
மதுரை: பல கோடி ரூபாயை செலவழித்து திருமங்கலத்தில் ஆளுங்கட்சி வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளதாக திருமங்கலத்தில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக ரீதியாக மக்களைச் சந்தித்தோம். அதனால் எங்களுக்கு தோல்வியல்ல. இது திமுகவிற்கு நிரந்தர வெற்றியல்ல.
அரசு எந்திரம் ,அதிகார பலம், பலகோடி ரூபாயை செலவழித்து வெற்றியை வாங்கியுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அராஜகத்தை மீறியும், அச்சுறுத்தலை மீறியும் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
வென்றது அடியாள்-பணம்- அதிகார பலம்: சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் துவங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை ஆளுங்கட்சி, பண பலத்தை, அதிகார பலத்தை, அடியாட்கள் பலத்தை பயன் படுத்தியுள்ளது.
இத்தகைய விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தினோம். ஆனால் பயனில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆகிய இருவருமே ஆளுங்கட்சியின் அராஜ கத்தையும், அத்துமீறல்களையும் சுட்டிக்காட்டி னார்கள். இப்பின்னணியில்தான் வாக்குப்பதிவு நடை பெற்றது.
இத்தகைய சூழலிலும், அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்த, வாக்கு சேகரித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications