ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கிராமங்கள்-16ம் தேதி அலங்காநல்லூரில்!

தமிழர்களின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.
இத்தகைய ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டுதான் உலகப் பிரசித்தி பெற்றது.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சிக்கல்கள் பல. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டை செய்தது உச்சநீதிமன்றம். இதனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள், குறிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொங்கலைக் கொண்டாடாமல் துக்கம் அனுசரித்தனர். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் பலனாக ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் வந்து விட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டை நடத்த கிராமங்கள் தயாராகி வருகின்றன.
புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஊரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
அதேபோல பாலமேட்டில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
சமீப காலமாக புகழ் பெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான நாளை நடைபெறவுள்ளது.
இதுதவிர காஞ்சரம்பேட்டை, கரடிக்கல், நல்லூர், ஆனையூர், வலையப்பட்டி, சின்னக் கட்டளை, உறங்கான்பட்டி, சக்குடி, வி்ல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்யக் கோரி உச்சநீதி்மன்றத்தில் பிராணிகள் நல வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications