ஒரே ஒரு வேலை... 3 லட்சம் விண்ணப்பங்கள்!!
மெல்போர்ன்: 1,05,000 டாலர் சம்பளம், சகல வசதிகளுடன் கூடிய உலகின் மிகச் சிறந்த வேலை உங்களுக்குக் காத்திருக்கிறது... இப்படி ஒரு விளம்பரம் இணையத் தளத்தில் வெளியானால், அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மவுஸும் கையுமாக உட்கார்ந்து விடுவீர்கள் அல்லவா...!.
நீங்கள் மட்டுமல்ல... கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அப்படித்தான் செய்தார்கள், இரு தினங்களுக்கு முன். விளைவு, அந்த விளம்பரம் வெளியிட்ட வெப்சைட்டின் சர்வரே 'உட்கார்ந்துவிட்டது'... பார்வையாளர்களால் ஏற்பட்ட ட்ராபிக் தாங்காமல்.
குயின்ஸ்லாந்து மாகாண அரசு சமீபத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹாமில்டன் தீவின் பொறுப்பாளர் பதவிக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, வெப்சைட்டில்.
இந்த வேலைக்கு தேர்வாகும் நபருக்கு மாதச் சம்பளம் மட்டும் 1,05,000 டாலர்கள். ரூபாயில் என்றால் 5 கோடிக்கும் மேல். அப்படி என்ன வேலை என்கிறீர்களா... அந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் பல பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீவின் அறியப்படாத புதிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறப்புகள் பற்றித் தெரிந்து அதை பயணிகளுக்குச் சொல்ல வேண்டும்.
இந்த தீவின் கடல் பிரதேசம் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரியச் சிறப்பு மிக்க பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 1500 வகை அரிய மீன்கள் மற்றும் 4000 வகை கடல் உயிரிகள் உள்ளன. கடற்பசு எனப்படும் அரிய வகை உயிரினமும் இந்த கடல் பகுதியில் உள்ளது.
இவற்றைப் பற்றி தெளிவாக அறிந்து சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்வதும், அந்தத் தீவின் மற்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள உள்ளூர் மக்களின் நட்பைப் பெறுவதும்தான் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் வேலை.
இந்த வேலைக்கான விளம்பரம் வெப்சைட்டில் வெளியான 60 நிமிடங்களுக்குள் உலகம் முழுவதிலும் 3 லட்சம் பேர் பார்வையிட்டு, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டார்களாம். அதற்குமேல் டிராபிக் நெரிசல் தாங்காததால் வெப்சைட் செயலிழந்துவிட்டதாம்.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து சுற்றுலா மந்திரி டெஸ்லே பாய்ல் கூறுகையில், இந்த அளவு விண்ணப்பங்கள் வரும், வெப்சைட்டே ஜாம் ஆகி நின்றுவிடும் என்றெலலாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் பொறுப்பான பதவி. கிட்டத்தட்ட அந்த தீவுக்கே கேர்டேக்கர் என்று சொல்ல வேண்டும்.
இப்போதைக்கு இந்த 3 லட்சம் விண்ணப்பங்களிலிருந்து 11 பேரை தேர்வு செய்யப்போகிறோம். குறிப்பிட்ட நாடு என்றில்லாமல், உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இறுதி நேர்முகத் தேர்வு குயின்ஸ்லாந்தில் நடக்கும், என்றார்.
அந்த அதிர்ஷ்டசாலி யாரோ என்றுதானே பெருமூச்சு விடுகிறீர்கள்! அதைவிட முக்கியம், உலகம் முழுக்க எந்த அளவு வேலையின்மை நிலவுகிறது என்ற உண்மை!!.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications