தூத்துக்குடி கப்பல் கேப்டன் சோமாலியாவில் சிறை!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் கேப்டன் தெரகுயா பெர்னாண்டோ , சோமாலியா நாட்டு கடத்தல்காரர்களால் 4 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்கக் கோரி கேப்டனின் உறவினர்கள் அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தெரகுயா பெர்னாண்டோ (54). இவர் கென்யா நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
இந்த கப்பல் நான்கு மாதங்கள் முன் அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த போது, சோமாலியா கடல் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டது. இதில் பெர்னாண்டோ உள்ளிட்ட 11 பேர் கொள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந் நிலையில் இவர்களை மீட்கக் கோரி அமைச்சர் கீதா ஜீவனிடமும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும், பெர்னாண்டோவின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications