மேடாஸ் டீலை முடிக்க ராஜு கையாண்ட டெக்னிக்!!

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த இரு நிறுவனங்களையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸுடன் இணைக்க தீவிரமாக முயன்றார் ராமலிங்க ராஜு. ஆனால் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க, ராஜு சில காரணங்களைக் கூறியுள்ளார். அதில் முக்கியமானது, சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஐபிஎம் முயன்று வருகிறது, என்பதாகும்.
"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள். சத்யம் நிறுவனம் கம்ப்யூட்டர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால்தானே ஐபிஎம் கையகப்படுத்தும்... அதுவே, ஐபிஎம்முக்குப் பிடிக்காத வேறு தொழில்களிலும் நம்முடைய கவனத்தைத் திருப்பினால், ஐபிஎம் நம் பக்கம் திரும்பாது. நிறுவனம் தப்பித்து விடும். எனவே மேடாஸை இணைப்பதில் தாமதமில்லாமல் செயல்பட வேண்டும்" என இயக்குநர் குழுவை வலியுறுத்தியுள்ளார் ராஜூ.
இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.
உண்மையில் ஐபிஎம் நிறுவனம் சத்யத்தைக் கையகப்படுத்த முயற்சித்ததா... இந்தக் கேள்விக்கு ஐபிஎம் தரப்பில் இதுவரை பதிலில்லை.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications