சந்த்ராயன்-2: நிலவுக்கு ரோபா அனுப்பும் இந்தியா
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானியும் நிலவுக்கு செலுத்தப்பட்ட சந்த்ராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குனருமாந மயில்சாமி அண்ணாதுரை, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் மனைவி வசந்தியும் உடன் இருந்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்தி்ப்பின்போது, மயில்சாமியின் ஊர், பெற்றோர் பற்றிய விவரங்களை முதல்வர் கேட்டார். அப்போது முதல்வர் மீது தனது பெற்றோர் வைத்துள்ள அன்பு, மரியாதை குறித்து மயில்சாமி விளக்கினார்.
சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் செயற்கைக்கோளின் செயல்பாடுகள், அடுத்த திட்டங்கள் ஆகியவை குறித்து மயில்சாமியிடம் கருணாநிதி ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மயில்சாமி,
மரியாதை நிமித்தமாகத் தான் முதல்வரை சந்தித்தோம். என் பெற்றோர் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர்கள். சமீபத்தில் நான் ஊருக்குப் போனபோது எனது தாயார், முதல்வரை சந்தித்தாயா என்று தான் கேட்டார். நான் அவரை சந்தித்த செய்தி கேட்டு எனது தாயார் மிகுந்த மகிழ்ச்சியடைவார்.
சந்த்ராயனை வெற்றிகரமாக ஏவிய தினத்தன்று முதல்வசர் கருணாநிதி உடனே எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதன்பிறகு, நவம்பர் 14ம் தேதியும் வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார்.
சந்த்ரயான்-2 செயற்கைக் கோளை நிலவுக்கு ஏவும் திட்டம் ரூ.450 கோடியில் செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. 2011ம் ஆண்டு இறுதி அல்லது 2012ம் ஆண்டு துவக்கத்தில் சந்த்ராயன்-2 செலுத்தப்படும்.
இந்த செயற்கைக் கோள், நமது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும். அதில் ஒரு சிறிய கார் போன்ற ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்படும்.
அது சந்திரனில் தரையிறங்கி சோதனையிடும். இந்த ரோபோ, ரஷ்ய ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications