4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது.
கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.
இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார்.
அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோர் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழுக் கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடக்கிறது. இதில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.
உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,
திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.
உண்ணாவிரத பந்தலில் திருமாவளவனுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இருந்தனர். இயக்குனர் அமீர், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்தார்.
உண்ணாவிரதம் தீவிரமடைந்ததால் மாநிலம் முழுவதும் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications