தாமிரபரணியுடன் 3 நதிகளை இணைக்கும் திட்டம்-பிப் 9ல் அடிக்கல்
நெல்லை: தமிழக நதிகளை இணைக்கும் பெரும் திட்டத்தை வரும் பிப்ரவரி 9ம் தேதி பாளையங்கோட்டையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசின் அலட்சியம் மற்றும் சில மாநில அரசுகளின் சுய நலத்தால் தாமதமாகி வருகிறது.
இதையடுத்து முதல் கட்டமாக மாநிலத்துக்குள் ஓடும் நதிகளை இணைப்பது என தமிழகம் முடிவு செய்தது. அதன்படி முதல் திட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்க ரூ. 369 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் 13 டிஎம்சி நீர் உபரியாக ஓடி கடலில் கலந்து வீணாகிறது. இதி்ல் 2.76 டிஎம்சி நீரை 73 கி.மீ. நீள கால்வாய் மூலம் தூத்துக்குடி மாவட்டம் எல்.எல்.சேரிக்கு கொண்டு செல்ல இத் திட்டம் வழி வகுக்கும்.
வழியில் கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகியவற்றையும் இந்தக் கால்வாய் இணைக்கும். இதனால் சாத்தான்குளம், ராதாபுரம் ஆகிய வறண்ட பகுதிகளுக்கு பாசன வசதி உருவாக்கப்படும்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி பாளையங்கோட்டையில் நடக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications