தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்-பாஜக
கோவை: வரும் மக்களவைத் தேர்தலி்ல் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக அக் கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஒரு பத்திரிக்கையாளர் மூலம் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக முயன்று தோற்றது. இதையடுத்து ரஜினியின் ஆதரவைப் பெற மூத்த தலைவர் அத்வானி முயன்று தோற்றார்.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் கூட்டணிக்கு பாஜக முயன்றது. அங்கும் வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் தமிழகத்தில் தனித்தே போட்டியிட வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய கணேசன்,
இலங்கை அரசு, இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மீறியுள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையல்ல. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேசினால், நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். பிரதமர் வேட்பாளரான அத்வானி இதில் உறுதியாக இருக்கிறார்.
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று ராஜபக்சே சொல்வதை ஏற்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிரோடு பிடிக்கவே முடியாது.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராக உள்ளது. கூட்டணிக்கு மற்ற கட்சிகள் விரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications