சென்னை சட்டக் கல்லூரி மீண்டும் திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த மோதலைத் தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. காவல் துறையினரின் கண் முன் நடைபெற்ற இச்சம்பவத்தில் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காட்டுமிராண்டித்தனமாக மோதி கொண்டனர்.

இதில் பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகிய 2 மாணவர்கள் சக மாணவர்களாலேயே கடுமையாக தாக்கப்பட்டனர். 45 பேர் கைது செய்யப்பட்டனர். 43 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது கமிட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தேர்வுகள் நடத்துவதற்காகவும், மற்ற மாணவர்களின் படிப்பை கவனத்தில் கொண்டும் கல்லூரியை மீண்டும் திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அடையாள அட்டை அவசியம்...

இந்த நிலையில் சென்னை சட்டக் கல்லூரி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அடையாள அட்டை வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அடையாள அட்டை வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர்.

கல்லூரி வளாகத்திற்குள் அரசியல், சாதி மற்றும் மத தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சுவரொட்டி ஒட்டுதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியினுள் மாணவர்கள் அனைவரும் பிரிவனையின்றி, ஒற்றுமையுடன் பழகி, கல்லூரி அமைதியாக நடைபெற ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளகிறேன்.

கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி வெளி நபர்கள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. பாதுகாப்பு கருதி கல்லூரி வளாகத்தின் உள்ளேயும், வெளியிலும் போதுமான அளவில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டு சட்டப் படிப்பிற்கான அனைத்து வகுப்புகளும் காலை 9 மணிக்கு தொடங்கும்.

ஐந்து ஆண்டு படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்பு காலை 9 மணிக்கும், இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான வகுப்புகள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும் என்றார் கல்லூரி முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+