பஸ்களை தாக்கினால் 'குண்டாஸ்'-டிஜிபி எச்சரிக்கை
சென்னை: பஸ்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்தி உண்ணா நோன்புகள், பேரணிகள், மனிதச் சங்கலிகள் போன்ற எல்லாவகையான அறப் போராட்டங்களையும் நிகழ்த்தி, அத்துடன் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து பேசியுள்ள சூழ்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கால வரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளார்.
அவரை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று உண்ணா நோன்பை விலக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில் சமூக விரோதச் செயலில் ஈடுபடுகின்ற சில கும்பல்களும் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டுவது போல் அரசுக்குச் சொந்தமான பொதுமக்களுக்குப் பயன்படுகிற போக்குவரத்து சாதனங்களைக் கொளுத்தியும் உடைத்தும் அராஜக வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை சுமார் 10 பேருந்துகள் தீ வைப்புக்கும், உடைப்புக்கும் உள்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பொது அமைதிக்கும், பொது மக்களுடைய உயிர் பாதுகாப்புக்கும் உடைமைகளுக்கும் ஏற்படுகின்ற இழப்பை மேலும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதால் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய சட்ட விரோதமான செயல்களிலே ஈடுபடுவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications