மேடாஸ் சிஇஓ ராஜினாமா!!
மும்பை: மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பிகே மாதவ் இன்று ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமா குறித்த கடிதத்தை இன்று செபியிடம் சமர்ப்பித்துவிட்டது மேடாஸ் நிறுவனம்.
சில தனிப்பட்ட காரணங்களுக்காக மாதவ் இந்த முடிவை எடுத்துள்ளதாக மேடாஸ் தெரிவித்துள்ளது. சத்யம் நிறுவனத்தை படுபாதாளத்துக்குத் தள்ளிவிட்ட அதன் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் குடும்பத்தின் கட்டுப்பாட்டி்ல இயங்குபவை மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனங்கள்.
இதில் மேடாஸ் இன்ப்ரா பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை சத்யத்துடன் இணைக்க முற்பட்டதிலிருந்துதான் சத்யம் நிறுவனத்துக்கு கஷ்ட காலம் தொடங்கியது.
இப்போது சத்யம் நிறுவனத்தின் மோசடிகள் குறித்து அரசு புலனாய்வு ஏஜென்ஸிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், மேடைஸ் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் தோண்டி எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் ராமலிங்க ராஜூ சத்யம் பொறுப்பிலிருந்து விலகிய நேரத்திலேயே, மேடாஸ் இன்ப்ராவின் செயல் நிலையில் அல்லாத இயக்குநர் மற்றும் தலைவரான ஆர்சி சின்ஹா ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போது மேடாஸ் இன்ப்ராவின் தலைமைச் செயல் இயக்குநர் பிகே மாதவும் அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்பட்டாலும், தீவிர மோசடி புலனாய்வு நிறுவனத்தின் வளையத்துக்குள் மேடாஸ் வந்துள்ள நிலையில் மாதவ் ராஜினாமா செய்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேடாஸ் நிறுவனத்தில் ராஜுவின் மகன் தேஜா ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு 36 சதவீத பங்குகள் உள்ளன.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications