பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை

அதிக வேக க்ரூஸ் ரக ஏவுகணை பிரம்மோஸ். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இன்று பிரம்மோஸ் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் டி.ஆர்.டி.ஓ ஆகியவை இணைந்து இந்த சோதனையை நடத்தின.
300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறி பார்த்து தாக்கும் வல்லமை படைத்தது பிரம்மோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஏவுகணை சோதனை, பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது வழக்கமான பரிசோதனைதான். எந்த விசேஷமும் இதில் இல்லை. பாகிஸ்தானை மிரட்ட இதை செய்யவில்லை. அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நமது பாதுகாப்புப் படைகள் எந்தவித அச்சுறுத்தலையும் சந்திக்க தயாராக உள்ளன.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
மாலேகான் வழக்கு நமது உள்நாட்டு விவகாரம். அந்த வழக்கை நாம் முறையாக விசாரித்து வருகிறோம். தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் சிறந்த முறையில் அதை கையாண்டு வருகின்றனர் என்றார் அந்தோணி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications