போலீஸ் மீது 'ஜல்லிக்கட்டு' நடத்திய கேடி!
கொல்லம்: பிடிக்க வந்த போலீஸாரிடமிருந்து தப்பிக்க, ஜல்லிக்கட்டு காளையை ஏவி விட்ட குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர்.
கேரளாவில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. சுதாரித்த போலீஸார், ஜல்லிக்கட்டுக் காளையை சமாளித்து அடக்கி, பின்னர் அதை ஏவி விட்ட குற்றவாளியையும் மடக்கிப் பிடித்தனர்.
கொல்லத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு அப்பகுதியில் வேட்டுக்குட்டன் என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆள் பார்க்க குள்ளமாக இருந்தாலும், காளைகளை அடக்குவதிலும், பாம்பு பிடிப்பதிலும் திறமைசாலியாம். அதனால்தான் இந்த வேட்டுக்குட்டன் பட்டப் பெயர்.
இவர் மீது பல வழக்குகள் உள்ளன. கை தேர்ந்த கிரிமினலும் கூட. குண்டர் சட்டத்தின் கீழும் பலமுறை கைதானவர்.
இவரை பல வழக்குகள் தொடர்பாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிரகாஷ் பதுங்கியிருக்கும் இடம் குறித்து சப் இன்ஸ்பெக்டர் விஜயனுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 3 போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார் விஜயன்.
போலீஸார் வந்ததை அறிந்ததும் தப்பிக்க முயன்றான் பிரகாஷ். யானைகளுக்கு அணிவிக்கப்படும் ராட்சத மணியை எடுத்து போலீஸாரை தாக்கியுள்ளான்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீஸார் அதிலிருந்து தப்பினர். இதையடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த, தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த காளையை அவிழ்த்து விட்டுள்ளான் பிரகாஷ்.
இதை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கட்டவிழ்த்து விடப்பட்ட அந்த ஜல்லிக்கட்டுக் காளை போலீஸார் மீது பாய்ந்தது.
இதில் சப் இன்ஸ்பெக்டரும், 2 காவலர்களும் லேசான காயமடைந்தனர். இருப்பினும் அங்கிருந்த பெரிய கயிற்றை எடுத்து காளையை துணிச்சலுடன் அடககி மடக்கினர் போலீஸார்.
பின்னர் காளையை ஏவி விட்டு தாக்கிய பிரகாஷையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஜல்லிக்கட்டுக் காளையை ஏவி தாக்கிய பிரகாஷை, காவல் நிலையத்தில் குமுறிக் கட்டியிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications