அரியலூர் அருகே பையில் கிடந்த குழந்தையின் உடல்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூர் பஸ் நிலையம் அருகே பஞ்சிளம் குழந்தையை கொன்று பையில் வைத்து வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் பஸ் நிலையத்துக்கு எதிரே செட்டி ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரை படிக்கட்டில் துணிப் பையில் ஒரு குழந்தையின் பிணம் இருந்தது.
போலீசார் பையை பிரித்து பார்த்தபோது, அதில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை வாயில் துணி வைத்து அடைத்து கொலை செய்யப்பட்டு, பின்னர் தூக்கி எரியப்பட்டது தெரிய வந்தது.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, குழந்தையை கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications