கடல் கொள்ளையர்கள் சுட்டு குமரி மீனவர் பலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஒருவர் ஈரான் எல்லையில் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை நகருக்கு அருகில் உள்ள அழிக்கால் கிராமத்தை சேர்ந்த மீனவர் டீயன்சன். கடந்த 10 ஆண்டுகளாக இவர் செளதி அரேபியாவில் மீன் பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஏசுமேரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். டீயன்சன் கடைசியாக கடந்த ஆண்டு ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் டீயன்சன் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் ஒரு படகில் சவுதி அரேபியா மற்றும் ஈரான் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். டீயன்சன் படகை ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு விசைப்படகில் வந்த கடல் கொள்ளையர்கள் டீயன்சன் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டீயன்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
டீயன்சன் உடலை ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு அவரது உறவினர்கள் வெள்ளி சந்தை போலீசில் மனு செய்தனர். டீயன்சன் மறைவினால் அழிக்கால் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications