'இலங்கை தமிழர்': மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சென்னை: இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் வெங்கடாசலம் கூறுகையில், அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்தும், சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் ஈழத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை முதல் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்த போராட்டத்தை அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் வெங்கடாச்சலம்.
இந்தப் போராட்டகத்தி்ல் பங்கேற்பதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications