மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுவெடிப்பு-2 போலீஸார் பலி
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பு: கிழக்கு இலங்கையில், மட்டக்களப்பில் இன்று காவல் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 2 போலீஸார் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர். வவுனியாவிலும் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று காலை ஏழரை மணியளவில் ஒரு சைக்கிள் வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 2 போலீஸார் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். இவர்களில் நான்கு பேர் பள்ளிச்சிறார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளே இதற்குக் காரணம் என ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வவுனியாவில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications