பெரம்பலூர் கோயிலில் பல கோடி நகை கொள்ளை-இது 6வது முறை!!
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வரலாற்று சிறப்புமிக்க வாலீஸ்வரர் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுவாமியின் ஆபரண நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த வாலீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு அதிகாலை நேரத்தில் கோயிலின் மேற்கூரையில் உள்ள கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் ஆபரண நகை பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த நகைகள் மற்றும் ஐம்பொன்னால் ஆன பூஜை பொருட்களை கொள்ளையடித்துள்ளது.
மேலும் மற்றொரு அறையில் இருந்த ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அதை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள் சகிதமாக வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்திய தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் போதிய பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லாததால், இதுவரை 6 முறை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications