இன்டர்நெட்டை ஆக்ரமித்த 'ஓபாமாமேனியா'!
வாஷிங்டன்: இன்டர்நெட் உலகை நேற்று ஓபாமா முற்றிலுமாக ஆக்ரமித்து கொண்டார். இன்டர்நெட் முழுமையும் ஓபாமா, ஓபாமா என அவரது புகழ் பாடின. அவரது பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாக 'பிளாக்குகளில்' ரசிகர்கள் வரிந்து கட்டி கொண்டு எழுதினர்.
அமெரிக்காவின் 44வது அதிபராக ஓபாமா நேற்று பதவியேற்றார். இதை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் இன்டர்நெட்டில் விரும்பி பார்த்தனர். இது குறித்து தங்களது கருத்துக்களை 'பிளாக்குகளில்' உடனுக்குடன் துரிதமாக வெளியிட்டனர்.
ஓபாமா பதவியேற்ற அடுத்த சில வினாடிகளில் வெள்ளை மாளிகை வெப்சைட் 'அமெரிக்காவுக்கு மாற்றம் வந்துள்ளது' என்ற துவக்க வரிகளுடன் செய்தி வெளியிட்டது. அந்த வெப்சைட்டின் முதல் 'பிளாக்கில்' ஓபாமாவின் கொள்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதிலிருந்து ஓபாமா அரசு இன்டர்நெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடு்ப்பது தெளிவாகி உள்ளது. அரசியல் மற்றும் செய்தி வெப்சைட்களை தவிர்த்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வெப்சைட்களும் ஓபாமா பற்றிய செய்திகளையே அதிகம் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் 'பிளாக்கில்', ஓபாமா அதிகாலையில் எழுந்தது, பதவியேற்றது, தனது முதல் உரை நிகழ்த்தியது, புஷ் விடைபெற்றது என அனைத்து விஷயங்களையும் நிமிடத்துக்கு ஒரு முறை என படுவேகமாகவும், சுவாரஸ்யமாகவும் தந்தது.
ஓபாமாவின் பூர்வீக நாடான கென்யாவில் உற்சாகம் கரைபுரண்டதையும் இன்டர்நெட் எடுத்துக் காட்ட தவறவில்லை.
நிக் ஓடியானோ என்ற கென்யரின் வீட்டில் உண்ண உணவில்லையாம். ஆனால் அவர் தன்னிடம் ஓபாமா படங்கள் பொறிக்கப்பட்ட சட்டைகள் இரண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு 'பிளாக்' செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஓபாமா தங்களது ரோல்மாடல் என இராக்கியர்களும், ஓபாமா தங்களது வலிகளை புரிந்து கொள்வார் என அரபு நாட்டை சேர்ந்தவர்களும் 'பிளாக்கில்' எழுதியுள்ளனர்.
எம்எஸ்என்பிசி இணையதளம் தனது 'பிளாக்கில்' சிறிய குழந்தைகள் முதல் அண்டார்டிக்காவில் வசிக்கும் விஞ்ஞானிகள் என அனைவரும் பதவியேற்பு நிகழ்ச்சியை டிவியில் பார்த்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications