பிரம்மோஸ் சோதனை தோல்வியா? குறி தவறியதாக கூறுகிறது டி.ஆர்.டி.ஓ
டெல்லி: அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் (டி.ஆர்.டி.ஓ),நேற்று சோதனையில் சில தடங்கல்கள் ஏற்பட்டதாகவும், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கவில்லை என்றும் கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அதி நவீன ஏவுகணை பிரம்மோஸ். ரஷ்யாவுடன் இணைந்து இந்த ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது.
தரையில், 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய வல்லமை படைத்தது பிரம்மோஸ். ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக செல்லக் கூடியது. அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லக் கூடிய திறமை படைத்தது.
இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோ ஆகியவற்றின் பெயர்களை இணைத்துத்தான் இந்த ஏவுகணைக்கு பிரம்மோஸ் என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்தூய்கோவ் வந்திருந்தபோது, ஏற்கனவே உள்ள சூப்பர் சானிக் பிரம்மோஸை மேம்படுத்தி, அதை ஹைபர் சானிக் ஏவுகணையாக தரம் உயர்த்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக அளவில் இத்தகைய தரத்தில் உள்ள ஏவுகணைகளிலேயே அதி நவீன ஏவுகணையாக பிரம்மோஸ் கருதப்படுகிறது.
இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை நேற்று முன்தினம் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சோதனையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கவில்லை என்றும் டி.ஆர்.டி.ஓ நேற்று அறிவித்தது.
இதுகுறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை சோதனையின் கடைசி கட்டத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை.
ஏன் இலக்கை ஏவுகணை தாக்கவில்லை என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்ந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
முதலில் வெற்றி பெற்றதாக கூறிய டி.ஆர்.டி.ஓ. தற்போது அதை மறுத்துக் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications