ரெளடி ஜூனியர் வீரப்பன் எண்கெளண்டரில் காலி!
திண்டுக்கல்: தேனி மாவட்டம் கீழக்கூடலூரை சேர்ந்தவர் அம்மாவாசை தேவர். இவர் ஒரு கள்ளச் சாராய வியாபாரி. இவரது மகன் தெய்வேந்திரன் என்ற 'மண்டைவெட்டி' தெய்வேந்திரன் ( 43). மகா ரெளடியான இவன் மீது மதுரை, திண்டுக்கல், தேனி பல்வேறு கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
மேலும் கேரள-தமிழக எல்லையில் தேக்கடி வனப் பகுதியில் யானைகளைக் கொன்று தந்தம் கடத்துவது, சந்தன மரம் கடத்துவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டு வந்தான்.
மேலும் வனப் பகுதியில் கஞ்சா பயிரிட்டும் விற்று வந்தான். இவன் மீது நடவடிக்கை எடுத்த வனக் காவலர் பாலகிருஷ்ணனை தெய்வேந்திரன் சுட்டுக் கொன்றான்.
இவனை பல ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தான். 2001ம் ஆண்டு திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தெய்வேந்திரன் தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தான்.
அவனை போலீசார் பிடிக்க முயன்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடினான். நீண்ட தேடலுக்குப் பின் அவனை போலீசார் பின்னர் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு திருச்சி மத்திய சிறையிலிருந்து தெய்வேந்திரன் திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது மீண்டும் தப்பியோடிவிட்டான்.
மீண்டும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தான்.
இந் நிலையில் விருதுநகர் அருகே காரியாபட்டியில் அவன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தெய்வேந்திரனை தனிப் படை போலீசார் கைது செய்தனர்.
அவனிடமிருந்த ரிவால்வர், தோட்டக்களை பறிமுதல் செய்தனர். போலீஸ் வேனில் அவன் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டான். திண்டுக்கல் அருகே பெருமாள் கோவில்பட்டி என்னுமிடத்தில் வந்தபோது நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினான்.
இதையடுத்து தெய்வேந்திரனை வேனில் இருந்து போலீசார் கீழே இறங்கினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தள்ளிவிட்டு, அவர் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்து வைத்திருந்த ரிவால்வரைப் பறித்துக் கொண்டு இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்பி பாரி, டிஎஸ்பி வெங்கிடுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தனிப்படை போலீசாருடன் சேர்ந்து அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்துக்குள் பதுங்கிருந்த தெய்வேந்திரனை சரணடையுமாறு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி கூறினார்.
ஆனால், தெய்வேந்திரன் எஸ்ஐ புகழேந்தியை நோக்கி சுட்டான். இதி்ல் அவரது வலது கையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து புகழேந்தி, தெய்வேந்திரனை நோக்கி துப்பாக்கியால் திருப்பிச் சுட்டார். இதில் தெய்வேந்திரனின் மார்பு, வயிற்றுப் பகுதிகளில் 3 குண்டுகள் பாய்ந்தன. அந்த இடத்திலேயே அவன் பலியானான்.
போலீஸ் மீது மக்கள் கண்காணிப்பகம் புகார்:
ஆனால், தெய்வேந்திரன் போலி என்கெளண்ன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பு போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்பினர் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் சித்திரவதை காரணமாக அவர் நடக்கவே சிரமப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அப்படி இருக்க அவர் எப்படி தப்பியோட முயற்சித்திருப்பார்?. அப்படியே அவர் ஓடியிருந்தாலும் கால்களில் சுட்டிருந்தால் அவரால் ஓட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் அல்லவா?.
எனவே தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி தனிப்படை போலீசார் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். பட்டப்படிப்பு படித்து வரும் தெய்வேந்திரன் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
வழக்கு முடியும் வரை தெய்வேந்திரன் குடும்பத்தினருக்கு சட்டப்படியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications