பிப்ரவரி 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா பொதுத் தேர்தலுக்கு முன்பாக, நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் பிப்ரவரி 12ம் தேதி தொடங்குகிறது. 16ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 13ம் தேதி இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
15 நாட்கள் நடைபெறும் இந்த பட்ஜெட் தொடர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் உரையுடன் தொடங்கும் என நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய நிதியாண்டின் முதல் சில மாதங்களுக்கான செலவுகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும்.
மே மாத வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னர், அமையும் புதிய அரசு புதிய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்.












Click it and Unblock the Notifications