அண்ணா, பெரியார் சிலை முன்பு கஞ்சா விற்ற 4 பெண்கள் கைது!
தஞ்சை: தஞ்சையில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு முன்பு நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், வல்லத்தில் அண்ணா, பெரியார் சிலை முன்பு சிலர் இரவு, பகல் பாரமல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
இதனையடுத்து வல்லம் சப்-இன்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் ரகசிய ரோந்து சென்றனர்.
அப்போது, அண்ணாசிலை, பெரியார் சிலை அருகே கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, அங்கு வல்லம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி சிண்ணப்பொண்ணு(45), அவரது மகள் வைதீல்வரி (18), கண்ணன் என்பவரது மனைவி மீனாட்சி(60), ஆனந்தன் மனைவி கல்யாணி(22) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications