சத்யத்தை வாங்க ஹாட் கேஷுடன் ஐகேட்ஸ் ரெடி!

Subscribe to Oneindia Tamil

Sathyam
ஹைதராபாத்: சரிந்த சாம்ராஜ்யமாகக் காட்சி தரும் சத்யம் நிறுவனத்தை வாங்க பிரபல அவுட்சோர்ஸிங் நிறுவனமான ஐகேட் கார்ப்பரேஷன் விருப்பம் தெரிவித்துள்ளது.

இத்தகவலை ஐகேட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பனீஸ் மூர்த்தி இன்று தெரிவித்தார்.

இதுகுறி்த்து அவர் கூறியதாவது:

உண்மைதான், நாங்கள் சத்யம் நிறுவனத்தை வாங்கிக் கொள்ள விரும்புகிறோம். இப்போதைக்கு சத்யம் நிறுவனத்துக்கு உள்ள கடன்கள் எவ்வளவு என்று ஆராய்ந்து வருகிறோம்.

ஆனால் சத்யத்தின் புதிய இயக்குநர் குழு என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.

எங்களுக்கு அவர்கள் விற்க முற்பட்டால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம், என்றார்.

உடனடியாக சத்யத்தை வாங்க இப்போது கையில் 65 மில்லியன் டாலர் பணம் வைத்திருக்கும் ஐகேட் நிறுவனம், மேலும் 50 மில்லியன் டாலர்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனால் சத்யத்தின் கடன் 1.25 பில்லியன் டாலருக்கும் மேல் இருந்தால் வாங்குவது பற்றி மறுபரிசீலனை செய்வோம் என்கிறார் மூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+