ஊழியர்கள் எண்ணிக்கை - கணக்கெடுக்கும் சத்யம் எச்.ஆர்.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்ற சரியான விவரத்தை கணக்கிடும் பணியில் அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவு இறங்கியுள்ளது.
சத்யம் நிறுவனத்தில் மொத்தம் 53 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில், 40 ஆயிரம் பேர்தான் உள்ளனர். மீதமுள்ள 13 ஆயிரம் பேரும் கற்பனை ஊழியர்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20 கோடி ஊதியமாக தரப்பட்டதாக ராமலிங்கராஜு கணக்கு காட்டி வந்துள்ளார் என்று ஆந்திர சிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து உண்மையிலேயே எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர் என்ற விவரத்தை அறியும் முயற்சியில் சத்யம் இறங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவு இதில் ஈடுபட்டுள்ளது.
ஊழியர்களின் விவரங்களை அறியும் முயற்சியில் எச்.ஆர். இறங்கியுள்ளதாக நிறுவன செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், எத்தனை பேர் பணியாற்றுகின்றனர், அவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
53 ஊழியர்கள் பணியாற்றுவதாகத்தான் நாங்கள் நம்புகிறோம். இருப்பினும் சிஐடி போலீஸாரின் கூற்றைத் தொடர்நது இதை உறுதி செய்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
சத்யம் நிறுவன கிளைகளில் பணியாற்றும் மேலாளர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையை எச்.ஆர். அனுப்பியுள்ளது. அதில், உங்களிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் ஊழியர்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு கோரியுள்ளது.
மேலும் அலுவலக இமெயில் முகவரிகளை வைத்தும், நிறுவனத்திடம் உள்ள டேட்டா பேஸ் தகவல்களை வைத்தும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சத்யம் நிறுவனத்திற்கு 66 நாடுகளில் கிளைகள் உள்ளன. மொத்தம் 185 வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications