கர்கரே உள்ளிட்ட 11 பேருக்கு அசோக் சக்ரா விருது
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளுடன் மோதி வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர தீவிரவாத ஒழிப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே, சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் கோபால் ஓம்ப்ளே மற்றும் கமாண்டோ வீரர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேருக்கு இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
ஆண்டு தோறும் மரணத்திற்குப் பின்னர் வழங்கப்படும் மத்திய அரசின் வீர விருது அசோக் சக்ரா. இந்த ஆண்டுக்கான விருது 11 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கியுள்ளார்.
குடியரசு தினத்தின்போது இந்த விருதுகள் அளிக்கப்படும்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியின்போது வீர மரணத்தைத் தழுவிய ஹேமந்த் கர்கரே, காவல்துறை அதிகாரிகள் அசோக் காம்தே, விஜய் சலேஸ்கர், துக்காராம் ஓம்ப்ளே, கமாண்டோ வீரர்கள் கஜேந்திர சிங் பிஷ்ட், சந்தீப் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
டெல்லி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எம்.சி சர்மா (இவர் டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிர் நீத்தவர்), ராணுவ அதிகாரி கர்னல் ஜோஜின் தாமஸ், ஒரிசா காவல்துறை அதிகாரி சத்பதி, ஹவில்தார் பகதூர் சிங் வோரா, மேகாலயா காவல் அதிகாரி டியங்டோ ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவின்போது அசோக் சக்ரா விருதுகள் வழங்கப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications