பிரதமர் பதவிக்கு புதியவர் - காங்கிரஸ் நிராகரிப்பு
டெல்லி: மன்மோகன் சிங் உடல் நலனைக் கருத்தில் கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், இது பொருத்தமே இல்லாத கேள்வி. ஒரு நேரத்தில் ஒரு பிரதமர்தான் இருக்க முடியும். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
பிரதமரின் உடல் நலனையடுத்து புதிய ஒருவரை பிரதமராக நியமிக்கும் கேள்விக்கே இடமில்லை. இது பொருத்தமே இல்லாத கேள்வியும் கூட.
இந்திய அரசியல் சட்டப்படி ஒரு நேரத்தில் ஒரு பிரதமர்தான் இருக்க முடியும். எனவேதான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, இடைக்கால பிரதமராக நியமிக்கவில்லை.
பிரதமர் வெளிநாடு செல்லும்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சரிடம் பொறுப்புகள் வழங்கப்படுவது வழக்கமானது. அந்த அடிப்படையில்தான் பிரணாப் முகர்ஜியிடம், பிரதமரின் பொறுப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் 2 வாரங்களில் பிரதமர் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பி விடுவார். எனவே புதிய தலைவரை நியமிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications