22 தமிழக மீனவர்களைப் பிடித்தது இலங்கை கடற்படை
கொழும்பு: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கையின் வடக்குப்பகுதியில், தமிழகத்தை சேர்ந்த 6 படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 22 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிடிபட்ட மீனவர்கள் 22 பேரும், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மல்லிப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் மீனவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications